ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

விவசாயிகளுக்கென தனி ஆணையம் அமைக்கக் கோரி நூதன போராட்டம்! April 23, 2017

விவசாயிகளுக்கென தனி ஆணையம் அமைக்கக் கோரி நூதன போராட்டம்!


விவசாயிகளுக்கென தனி ஆணையம் அமைக்க கோரி திருச்சியில் அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மாவட்டந்தோறும் ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் ஆதிவாசி போல் உடையணிந்து காக்கை படம் ஒட்டப்பட்ட அட்டை முன்பு மனு கொடுத்தனர். இந்நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி அவர்களை போலீசார் கைது செய்தனர்