மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா மீது, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பல்வேறு குற்றஞ்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
விவசாயிகளுக்கு ஆதரவாக, நாளை மறுதினம் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்ட விளக்கக் கூட்டம், திமுக சார்பில் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது.
இதில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு, மத்திய அரசுக்கு ஜால்ரா போடுவதிலேயே காலத்தை கழிப்பதாக சாடினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை வரவேற்பதாக குறிப்பிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், பிரச்னையை மத்திய அரசு திசை திருப்பி வருவதாக குற்றம்சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்திரராசன், தேசிய மேலாண்மை சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறவில்லை என்றும், பாஜக ஆட்சி நடைபெற்று வருவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சாடினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விவசாயிகளின் பிரச்சினை இந்திய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளதாக குறிப்பிட்டார்