திங்கள், 24 ஏப்ரல், 2017

தமிழகம் முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்! April 24, 2017

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சிக்கு கூடுதல் நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக்கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். 

இதற்கு ஆதரவாக தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. 

பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காது என தெரிவித்துள்ள நிலையில், வணிகர் சங்கத்தினர், பேருந்து, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இந்த போராட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்புக்காக சென்னையில் 15 ஆயிரம் போலீசாரும், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: