நாளை அரசு பேருந்துகள் 100 சதவிகிதம் வழக்கம்போல இயங்கும் என மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா தொழிற்சங்கம் இதில் பங்கேற்காது என தெரிவித்தார்.
மேலும் முதல்வரின் ஆணைப்படி தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து பேருந்துகளும் இயங்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இதுவரை அமைக்கப்படவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கரூர் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வேண்டியவர்களுக்கு 200 ஏக்கர் நிலம் உள்ளது.
எனவே தான் அந்த இடத்தில் மருத்துக்கல்லூரி வர வேண்டும் என்று செந்தில் பாலாஜி வற்புறுத்துவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்.