நெதர்லாந்தின் எந்தோவென் நகரில் நடைபெற்ற பி.எஸ்.வி எந்தோவென் மற்றும் ஏ.எஃப்.சி அஜாக்ஸ் அணிகள் இடையேயான கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பார்வையாளர் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் புகை குண்டு ஒன்றை வீசியுள்ளார். வெடிகுண்டு வெடித்ததில் எழுந்த கரும்புகை பார்வையாளர் பகுதி முழுவதையும் புகை மண்டலமாக மாற்றியது.
பார்வையாளர் பகுதியில் வீசப்பட்டது புகை குண்டு என்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. எனினும் பார்வையாளர்கள் பலருக்கு மூச்சு விடுவதிலும், சுவாசிப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பார்வையாளர்கள் மருத்துவமனைக்கு முதலுதவிக்காக கொண்டுசெல்லப்பட்டனர்.
புகை மண்டலத்திற்கு மத்தியில் ஏராளமான பார்வையாளர்கள் அமர்ந்திருக்க, பிற பகுதியில் இருந்த பார்வையாளர்கள் எல்லாம் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பார்வையாளர் பகுதியில் புகை குண்டை வீசிய நபரை அடையாளம் கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். புகை குண்டு வீசப்பட்டதை அடுத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்ட கால்பந்தாட்டம் மீண்டும் நடைபெற்றது.