தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காணாமல், பதவிகளை ஏலம் போட அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் கொஞ்ச நாள் ஆட்சியில் இருந்தால் போதும் என்ற மிகக் குறுகிய மனப்பான்மையுடன் அதிமுக அரசு செயல்படுவதாகவும் அரசு ஊழியர்களை “110 அறிவிப்பு” மூலம் ஏமாற்றியதன் விளைவாகவே அவர்கள் போராடி வருவதாகவும் கூறியுள்ளார். அரசு நிர்வாகம் முற்றிலும் நிலைகுலைந்து, மக்கள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாக நேரிடும் என்பதால், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் உடனடி கவனம் செலுத்தி தீர்வு காண முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.