புதன், 26 ஏப்ரல், 2017

தமிழிசை சவுந்திரராஜனுக்கு துரைமுருகன் எச்சரிக்கை April 26, 2017




தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற வைத்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டால் அது பகல்கனவாகவே முடியும் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு திமுக கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கைதெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தமிழிசை தப்பான தகவல்களை அறிக்கை வெளியிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

காவிரி விவகாரம், விவசாயிகள் நிவாரண நிதி, நீட் தேர்வு என தமிழகத்தை தொடர்ந்து பாஜக அரசு வஞ்சித்து வருவதாக குறிப்பிட்ட துரைமுருகன், அதற்கு தமிழிசை ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தவறான தகவல் மூலமாக தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று கூறிய அவர், வறட்சியில் வாடும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளிலும் அரசியல் செய்ய முயற்சி செய்ய வேண்டாம் என்று தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.