ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

பலமுறை பயன்படுத்தும் ராக்கெட் சோதனை வெற்றி

ஒருமுறை பயன்படுத்தப்பட்ட ராக்கெட்டை மீண்டும் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தி சாதனை படைத்திருக்கிறது அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.
பலமுறை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட FALCON 9 என்ற இந்த ராக்கெட் விண்ணுக்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்திருக்கிறது. உரிய மாற்றங்களைச் செய்து இதை மீண்டும் பயன்படுத்த முடியும். இந்த வகையில் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியிருப்பது, வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். இந்தச் சாதனை மூலம் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், இந்த நாள் பொன்னாள் எனவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். பூமிக்குத் திரும்பும் ராக்கெட்டை 24 மணி நேரத்துக்குள் மீண்டும் விண்ணுக்குச் செலுத்துவதே தமது அடுத்த இலக்கு என்றும் அவர் கூறினார். ராக்கெட் தொழில்நுட்பத் துறையில் புதிய சகாப்தம் தொடங்கியிருப்பதாகவும் அவர் பெருமையுடன் கூறினார்.