சனி, 22 ஏப்ரல், 2017

மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கும் அன்னியநட்டு குளிர்பானங்கள் : விலை போன வியாபாரிகள்..துணை நிற்கும் ஊடகங்கள்..!

தமிழகத்தில் காளைக்காக நடந்த போராட்டமானது காவிகளை மட்டுமல்ல, கார்பரேட்களையும் கலங்கச் செய்தது.
அமெரிக்க மோகம் மற்றும் நுகர்வு மோகத்தாலும், கிரிக்கெட் நட்சத்திரங்கள், சினிமா நடிகர்கள் ஆகியோரின் விளம்பர மோகத்தாலும் இளைஞர்களிடையே ஒரு பண்பாடாக பரவி இருந்தது  கோக் – பெப்சி.
அதே இளைஞர்களே சுயமரியாதை உணர்வோடு மெரினா போராட்டத்தில் சாலைகளில் ஊற்றி அமெரிக்க கோலா பானங்களைத் தடை செய் என முழக்கமிட்டனர்.
இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் கோக், பெப்சி புறக்கணிப்பு முழக்கம் மக்களின் முழக்கமாக மாறியது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள வணிகர் சங்கங்கள் கோக் – பெப்சியை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இனிமேல் கோக், பெப்ஸி, ஃபேன்டா உள்ளிட்ட அன்னிய குளிர்பானங்களை விற்பனை செய்யமாட்டோம் என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார்கள்.
உறுதிமொழி எடுத்து மூன்றுமாதங்கள் கூட முடியவில்லை. அதற்குள் அன்னிய குளிர்பான மோகம் மீண்டும் தலைதூக்கி இருக்கிறது.
வெயில்காலம் தொடங்கியுள்ள நிலையில், அன்னிய குளிர்பானங்களுக்கு தொலைக்காட்சி விளம்பரங்கள் தூள் பறக்கின்றன. கடைகளிலும் அன்னிய குளிர்பானங்கள் குவிந்துள்ளன.
மூன்றே மாதங்களில் தங்களுடைய சபதத்தை இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் குடும்பங்களும், வியாபாரிகளும் காற்றில் பறக்க விட்டுவிட்டார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விலை குறைந்திருந்தால் போதும் என்று இளைஞர்களும், மாணவர்களும் நினைத்து விட்டார்களா?
கமிஷனை கூடுதலாக கொடுத்தால் போதும் என்று வியாபாரிகள் நினைத்து விட்டார்களா?
கொண்ட கொள்கையில், எடுத்த சபதத்தில் தமிழர்கள் எப்போதுதான் உறுதியாக நிற்பார்கள்?
ஒரு முடிவை எடுப்பதும் அந்த முடிவில் உறுதியாக நிற்பதுவும்தான் கொள்கையாளர்களின் அடையாளம் என்பதை தமிழர்கள் உணர்வது எப்போது?

http://kaalaimalar.net/again-foreign-cool-drinks-sales-in-tamil-nadu/

Related Posts: