ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

யாருக்கு எவ்வளவு பணம்?..... வருமான வரித்துறையின் ஆவண விவரங்கள்

யாருக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டிருக்கும் ஆவணங்களில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. அதனை இப்போது பார்க்கலாம்.
ஒரு பாகத்திற்கான மொத்த வாக்காளர்களில், 85 சதவிகித பேருக்கு பணப்பட்டுவாடா செய்வது இலக்கு. ‌ஆர்கே நகர் தொகுதியில் மொத்தமுள்ள 7 வார்டுகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பொறுப்புகள் பிரித்து தரப்‌பட்டுள்ளன.
அதன்படி, அமைச்சர் ஒருவருக்கு 42பாகங்கள் வரை ஒதுக்கப்பட்டு, அந்த வாக்காளர்களுக்கான பணம் பிரித்து தரப்பட்டிருப்பது ஆவணம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பொறுப்பிலும் 38 பாகங்களில் 39 ஆயிரத்து 50 வாக்காளர்களில் 85 சதவிகிதமான 33 ஆயிரத்து 193 பேருக்கு 13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு 13 கோடியே 13 லட்சத்து 20 ஆயிரமும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு 12 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரமும் ஒதுக்கப்பட்டுள்ளது அமைச்சர் தங்கமணி 12 கோடியே 67 லட்சத்து 32 ஆயிரம், அமைச்சர் வேலுமணி அதிகபட்சமாக 14 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரம் ஒதுக்கப்பட்டிருப்பது ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ஜெயகுமாரிடம் 11 கோடியே 68 லட்சத்து 76 ஆயிரம், அதிமுக அம்மா அணி தஞ்சை மாவட்டச் செயலாளர் வைத்திலிங்கத்திற்கு 11 கோடியே 13 லட்சத்து 48 ஆயிரம் ஒதுக்கப்பட்டிருப்பது ஆவணத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது அந்த வகையில் ஆர்கே நகர் தொகுதியில் மொத்தமுள்ள 256 பாகங்களில் மொத்தமுள்ள 2 லட்சத்து 63 ஆயிரத்து 696 வாக்காளர்களில் 85 சதவிகிதமான 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 பேருக்கு, தலா 4 ஆயிரம் என்ற கணக்கில் மொத்தம் 89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் என ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆவணத்தின் எந்த இடத்திலும் ரூபாய் என்ற சொல் இடம்பெறவில்லை.

Related Posts: