
சமூகவலைத்தளங்களை தற்போது 10 இயர்ஸ் சேலன்ஞ் ஆட்டிப் படைத்து வருகிறது. தனி நபரின் விருப்பங்களுக்கு மத்தியில் சமூக அக்கறையும் அதில் இழையோடுகிறது.
சோஷியல் மீடியாவாசிகள் அனைவரும் தற்போது தங்களுடைய 10 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்களை தேடிப்பிடித்து, அவற்றை ஆர்வமுடன் சமூக வலைத்தலங்களில் அப்லோட் செய்து வருகின்றனர். அனைவரின் புகைப்படங்களும் தற்போது லைக்சை அள்ளி வருகின்றன. அதற்கு காரணம் ”10 இயர்ஸ் சேலன்ஞ்”
சோஷியல் மீடியாக்களில் அவ்வபோது சில சவால்கள் மகா பிரபலமடையும்.. பனிக்கட்டிகள் போடப்பட்ட நீரை தலையில் ஊற்றிக்கொள்ளும் ஐஸ் பக்கெட் சேலன்ஞ், ஓடும் காரில் இருந்து திடீரென இறங்கி நடனமாடும் கிகி சேலன்ஞ், நெய்மர் மைதானத்தில் உருண்டு பிறண்டதை இமிடேட் செய்யும் நெய்மர் சேலன்ஞ்.. இப்படி பல சேலன்ஞ்சுகள் தோன்றி அவ்வபோது சோஷியல் மீடியாக்களை கலகலப்பாக்குகின்றன.
அந்த பட்டியலில் தற்போது இணைந்திருப்பதுதான், 10 இயர்ஸ் சேலன்ஞ். இதில் பங்கேற்று வரும் ஒரு தரப்பினர் தங்களை புகைப்படங்களை பதிவேற்றம் செய்து மகிழ்ந்து கொண்டிருக்க, மற்றொரு தரப்பினர் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் இந்த சேலன்ஞ்ஜை பயன்படுத்தி வருகின்றனர்.
10 வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட திட்டங்கள், இதுவரை நிறை வேற்றப்படாமல் உள்ளதையும்.. 10 வருடங்களுக்கு முன் விளைநிலங்களாக இருந்தவை தற்போது எப்படி கட்டடங்களாக காட்சியளிக்கின்றன என்பதையும்.. 10 வருடங்களுக்கு முன் இருபுறமும் மரங்களுடன் வாகனங்களை வரவேற்ற சாலைகள், தற்போது மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்ட நிலையில் வெறிச்சோடி காணப்படுவதையும்.. புகைப்படங்களாக பதிவேற்றி வேதனையை தெரிவித்து வருகின்றன.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் அதிகரித்துள்ளது.. பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் காற்று மாசுபாடு உயர்ந்துள்ளது.. பூவுலகு சார்பில் 10 ஆண்டுகள் அல்ல, 100 ஆண்டுகள் ஆனாலும் பிளாஸ்டிகை அழியாமல் இருக்கும் என பதிவேற்றம் செய்துள்ளனர். போர் காரணமாக சிரியா போன்ற நாடுகள் அடைந்துள்ள அவல நிலை.. ஆகியவற்றையும் 10 இயர்ஸ் சேலன்ஞ்ஜில் அவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது, சமூக அக்கறையை வெளிப்படுத்துவது ஆகியவை இந்த 10 இயர்ஸ் சேலன்ஞ்சில் 2 வகை என்றால், 3ஆவது ஒரு வகையும் உள்ளது. அது நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை கலாய்ப்பது.. உடன் தங்களையும் சுய எள்ளல் செய்துக்கொள்வது.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி-அத்வானி உறவில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மருது சகோதரர்கள் என அழைக்கப்படும் ஓபிஎஸ்-ஈபிஸ் கடந்த 10 ஆண்டுகளில் கடந்து வந்த பாதை உள்ளிட்ட பல புகைப்படங்களையும் நெட்டிசன்கள் 10 இயர்ஸ் சேலன்ஞ்சில் களமிறக்கி உள்ளனர்.
source ns7.tv