ஞாயிறு, 20 ஜனவரி, 2019

சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கப்போகும் நிலவு! January 20, 2019

Image
ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் சந்திர கிரகணம் தோன்றும் எனவும் அந்த சமயத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் எனவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி மாதத்தில் வரும் முதல் பவுர்ணமியை Super Moon அல்லது Wolf Moon என்று அழைப்பது வெளிநாட்டினரின் வழக்கம். இந்த முறை, சந்திர கிரகணமும் சேர்ந்து வருவதால், ஜன. 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காற்றில் அதிக மாசு இருந்தால், அதிக அளவில் சிவப்பு நிறம் வெளிப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால், இன்றைக்கு தெரியும் நிலவிற்கு  Super Blood Wolf Moon என பெயர் வைத்துள்ளனர்.
எந்தெந்த பகுதிகளில் பார்க்கலாம்?
அமெரிக்காவில் சில பகுதிகளில் இந்த சிவப்பு நிலவை பார்க்க முடியும் எனவும் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் இந்த சிவப்பு நிலவை பார்க்க முடியாது எனவும் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
எப்போது தெரியும்?
அமெரிக்க நேரப்படி, ஜனவரி 20ம் தேதி இரவு 11.41 மணியில் இருந்து ( இந்திய நேரம்: ஜனவரி 21, காலை 10.11 மணி) இந்த சிவப்பு நிலவை பார்க்க முடியும். இந்த அதிசய நிகழ்வு, விண்ணில் 62 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Super Blood Wolf Moon எப்படி தெரியும்?
Super Blood Wolf Moon-ன் முதல் கட்டத்தில், நிலவில் எந்த வித மாற்றமும் தென்படாது.
இரண்டாவது கட்டத்தில் பாதி கிரகணம் தெரிய ஆரம்பிக்கும்.
மூன்றாவது கட்டத்தில், நிலவு முழுவதும் சிவப்பு நிறத்தில் மாறிவிடும்.
வெறும் கண்ணால் பார்க்க முடியுமா?
Super Blood Wolf Moon-ஐ பார்க்க எந்தவிதமான சிறப்பு கண்ணாடிகளும் தேவையில்லை என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், வானம் மேகமூட்டம் இல்லாமல் இருந்தால் வெறும் கண்ணால் இந்த அதிசய நிகழ்வை பார்க்க முடியும் என தெரிவித்துள்ளனர். விண்ணில் இப்படி தெரியும் நிலவால் எந்தவித ஆபத்தும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

source ns7.tv