ஞாயிறு, 20 ஜனவரி, 2019

நாடாளுமன்றத் தேர்தலில் EVM-ஐ பயன்படுத்த 23 கட்சிகளின் மகா கூட்டணி எதிர்ப்பு! January 20, 2019


Image
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்திடம் முறையிட, பாஜகவுக்கு எதிராக உருவாகியுள்ள 23 கட்சிகளை உள்ளடக்கிய மகா கூட்டணி முடிவு செய்துள்ளது. 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் குளறுபடிகள் குறித்த அறிக்கை தயார் செய்ய 4 பேர் கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவ், காங்கிரசின் அபிஷேக் சிங்வி, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த சதீஷ் மிஸ்ரா ஆகியோரே, இந்த 4 பேர் கமிட்டி ஆவர். பாஜக அரசுக்கு எதிரான பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்குப் பின், மம்தா பானர்ஜி அளித்த தேநீர் விருந்தின் போது, இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேட்டியளித்த அபிஷேக் சிங்வி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பழைய வாக்குச்சீட்டு முறையே கொண்டு வர வேண்டும் என்பதே, தங்களது நிலைப்பாடு என்றார். எனினும் தேர்தலுக்கு 2 மாதங்களே உள்ள நிலையில், குறைந்தபட்சம் மின்னணு வாக்குப்பதிவின் போது, யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

source ns7.tv