மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கூலிப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் விழா நடைபெற்றது.
விழாவுக்கு சிறப்பு விருந்தினராக, தற்போதைய அறிவியல் நகர துணைத்தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சகாயம் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிவில் நிருபர்களுக்கு சகாயம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் உயர் பதவிகளில் இருக்கும் பெரும்பாலான அதிகாரிகள், அரசு பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி மூலம் பயின்றவர்கள்.
தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லக்கூடிய ஒரே ஊடகமாக இருப்பது அரசு பள்ளியும், அரசு பள்ளி மாணவர்களும் தான்.
ஊருக்கே உணவளித்த விவசாயி தற்போது நொடித்து போவதும், தற்கொலை செய்து கொள்வதும் நாட்டிற்கே அவமானத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கா அவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் எங்கிருந்தாலும், அவை வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.