ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

வுடி பற்றி ஸ்டேட்டஸ்: இளைஞர்கள் வெட்டிக்கொலை

ஃபேஸ்புக்கில், ஸ்டேட்ஸ் போட்ட ஒரே காரணத்துக்காக, சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவர், பிரபல ரவுடி ஸ்ரீதர் மற்றும் அவரது அடியாட்கள் தரப்பால் வெட்டிக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, முகநூல் பதிவுக்காக கொல்லப்பட்ட இளைஞரின் நண்பரையும், ரவுடி ஸ்ரீதரின் மற்றொரு குழு தலையைத் துண்டித்து, படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்திருக்கிறது.
காஞ்சிபுரம் வெள்ளக்குளத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (28). எம்.பி.ஏ முடித்துவிட்டு, திருப்பதி அருகே உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில், இறுதியாண்டு படித்த மாணவர். தந்தை கூலி தொழிலாளியாக இருந்தபோதும், கஷ்டப்பட்டு படித்து முன்னேறி வந்த சந்திரசேகர், மொட்டுகள் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். சுறுசுறுப்பாக உலா வந்துகொண்டிருந்த சந்திரசேகர், புதன்கிழமை மாலை வீட்டின் அருகில் வெட்டிக்கொல்லப்பட்டார். முதலில் இவர் எதற்காகக் கொல்லப்பட்டார் என்பது, புரியாத புதிராக இருந்த நிலையில், அவரது முகநூல் பக்கம் அதற்கான காரணத்தை சொன்னது.
120க்கும் அதிகமான வழக்குகளோடு, போலீசிடம் பிடிபடாமல் நாடு நாடாக ஓடிக்கொண்டிருக்கும் பிரபல ரவுடி ஸ்ரீதரையும், அவரது அடியாளாகக் கருதப்படும் திருப்பருத்திக்குன்றம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனையும் முகநூலில் நேரடியாக கூட விமர்சிக்காமல், மறைமுகமாக விமர்சனம் செய்த நிலையில், இவர் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு சந்திரசேகருக்கு தொடர் மிரட்டல்கள் இருப்பதை அறிந்திருந்தும், உளவுத்துறை போலீசார் கோட்டை விட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி சிவகாஞ்சி போலீசாரிடம் கேட்டபோது, வெங்கடேசன் உள்ளிட்ட 30 பேரை அழைத்து விசாரித்திருப்பதாகக் கூறினர்.
காஞ்சிபுரம் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் கேட்டபோது, பிரபல ரவுடி ஸ்ரீதர் மற்றும் அவரது அடியாட்களை பற்றி முகநூலில் விமர்சித்ததால், இளைஞர் சந்திரசேகர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்திருப்பதாகத் தெரிவித்தார். முகநூலுக்காக இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாக, வியாழக்கிழமை அவரது நண்பர் சரவணன் என்பவரும், வீட்டின் அருகிலேயே, தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

Related Posts: