ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

தென்பெண்ணை ஆற்று நீர் மாசுபட்டதால் செத்து மிதக்கும் மீன்கள்! April 09, 2017

தென்பெண்ணை ஆற்று நீர் மாசுபட்டதால் செத்து மிதக்கும் மீன்கள்!


தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்ப்பட்டுள்ள மாசு காரணத்தால் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்துமடிந்து வருகின்றன.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் மிகபெரிய நீர் ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றில் தர்மபுரி மாவட்டம் இருமத்தூரை அடுத்துள்ள டொக்கம்பட்டி பகுதியில் இருந்து நீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுவருகிறது. 

இந்த நீரில் திடீரென மாசு ஏற்பட்டதால் தண்ணீரின் நிறம் மாறியுள்ளது. மேலும், ஆயிரக்கனக்கான மீன் குஞ்சுகள் மற்றும் மீன்கள் உயிரிழந்து வருகின்றன. இதுமட்டுமின்றி தண்ணீரில் கடும் துற்நாற்றமும் வீசுவதால் அங்கு மக்கள் செல்லமுடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய அதிகாரிகள் உடனடியாக முயற்சி மேற்கொள்ள பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Related Posts: