செவ்வாய், 25 ஏப்ரல், 2017

#உ_பி.யில் காவல் நிலையம் மீது பஜ்ரங்தள் RSS BJP காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தாக்குதல், காவலரின் துப்பாக்கி பறிப்பு


உத்திர பிரதேசத்தில் சனிக்கிழமை காலை சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரை விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறையிடம் புகார் கிடக்கவே இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இவர்களது கைது சம்பவம் குறித்த செய்தி வெளியானதும் அப்பகுதி விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் இவர்கள் கைது செய்து வைக்கப்பட்டுள்ள ஃபதெஹ்பூர் சிக்ரி காவல் நிலையத்தை சூழ்ந்துள்ளனர். அங்கு காவல் நிலைய அதிகாரிக்கும் வி.ஹச்.பி யினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.
இந்த வாக்கு வாதத்தின் போது காவல்துறை அதிகாரியை விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஜக்மோகன் சாஹர் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனையடுத்து நிலைமை மோசமானதை உணர்ந்த காவல் துறையினர் தடியடி நடத்தி அந்த கூட்டத்தை கலைத்துள்ளனர்.
தடியடியின் போது அப்பகுதியை விடு தப்பி ஓடிச் சென்றவர்கள் மீண்டும் காவல் நிலையத்தை சூழ்ந்துகொண்டு காவல் நிலையத்தின் மீது கற்களை எரிந்துள்ளனர். பதிலுக்கு காவலர்களும் அவர்கள் மீது கற்களை எறிந்ததாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட இன்னும் சிலரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் ஐந்து பேரை சாதர் பஜார் காவல் நிலையத்திற்கு காவலர்கள் அழைத்துச் செல்லவே அந்த காவல் நிலையத்தின் மீதும் நள்ளிரவு பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அப்பகுதி பாஜக எம்.எல்.ஏ. உதைபான் சிங் உட்பட பல பாஜக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இந்த கைதை எதிர்த்து அங்கு போராட்டம் நடத்தியதாக தெரிகிறது. மேலும் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இவர்களின் கோரிக்கையை ஏற்காத காவல்துறை கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முடியாது என்று கூறியுள்ளது.
காவல்துறையின் இந்த முடிவை அடுத்து அங்கு மேலும் இந்துத்வா கும்பல் கூடியுள்ளது. அவர்களை கலைக்க காவல்துறை தடியடி நடத்த நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. இதில் காவல்துறை வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டு ஒரு காவலரின் கைத்துப்பாக்கி பிடுங்கப்பட்டுள்ளது. அந்த காவலரும் வன்முறை கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இந்த கலவர கும்பலை அமைதி படுத்த காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிகிறது. கலவரக்காரர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த கும்பல் சிறையில் உள்ள அவர்களது கூட்டாளிகளை விடுவிக்க சிறை பூட்டை உடைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்து ஓரிரு மாதங்கள் கூட கடந்திராத வேலையில் காவல் நிலையத்தையே தாக்கி அதில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டவர்களை பூட்டை உடைத்து தப்ப செய்யும் அளவிற்கு வலது சாரி இந்துத்தவ கும்பலின் ஆட்டம் அதிகரித்துள்ளது.