குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் களம் இறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று குஜராத்திலிருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய மீராகுமார் இன்று கர்நாடக தலைநகர் பெங்களூரு சென்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எம்.பி. எம்.எல்.ஏக்களைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
பின்னர் திமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளிடம் ஆதரவு திரட்டும் நோக்கில் சென்னை வந்தார். அவரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். அப்போது பேசிய மீராகுமார், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தனிப்பட்ட முறையில் கோருவதற்காகவே வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர் திமுக வின் ஆதரவைப் பெற மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர், பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.