ஞாயிறு, 2 ஜூலை, 2017

மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு July 02, 2017




ஊழல் புகாருக்கு உள்ளான அரசு அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய தகவல் ஆணையம், ஊழல் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள அதிகாரிகளின் பட்டியலை துறை வாரியாக வெளிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஆணையர் யோஷோ வர்தன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த பட்டியல் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்கும் நோக்குடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இத்தகைய பட்டியல்களை வெளியிடுவதன் மூலம், அரசு மேலும் சிறப்பாக இயங்க வழி வகுக்கும் என்றும் யோஷோ வர்தன் தெரிவித்துள்ளார்.