தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, இதனை தெரிவித்த அவர், ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று தமிழகத்தின் மேலடுக்கு பகுதியில் நிலவுவதாகவும் கூறினார்.
இதன் காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.
வட, தென் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றும், சென்னையின் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் பாலச்சந்திரன் மேலும் தெரிவித்தார்