கர்நாடக மாநிலம் மாடப்பூர் என்னுமிடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பயணம் செய்த கார் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மாநில பாஜக தலைவருமான எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த செவ்வாயன்று இவர் பயணித்த கார் மாடப்பூர் என்னுமிடத்தில் சாலையைக் கடக்க முயன்ற சுரேஷ் என்கிற இளைஞர் மீது பலமாக மோதியது.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் அந்த இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் காரின் ஓட்டுநரான ரவிச்சந்திரன் என்பவரைக் கைது செய்தனர்.
விபத்தின்போது காரை ரவிச்சந்திரன் ஓட்டினாரா அல்லது எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா தான் ஓட்டினாரா என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.