புதன், 18 அக்டோபர், 2017

இந்த ஆண்டு 24% குறைந்த நகை விற்பனை! October 17, 2017

இந்த ஆண்டு 24% குறைந்த நகை விற்பனை!


பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால், இந்த ஆண்டு நகை விற்பனை  24 சதவீதம் குறைந்துள்ளதாக, ஜெய்ப்பூர் நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தீபாவளியை முன்னிட்டு, புத்தம் புதிய டிசைன்களில் நகைகள் தயாரித்து காட்சிப் படுத்தியுள்ளதாகவும், ஆனால், வாடிக்கையாளர்களால் அவற்றை ரசிக்க மட்டுமே முடிவதாகவும், புதிதாக நகை வாங்கும் சக்தி மக்களிடம் இல்லை என்றும் நகைக்கடை உரிமையாளர்கள் குறிப்பிட்டனர். 

கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை எனக்கூறி புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என திடீரென மத்திய அரசு அறிவித்தது. இது பொதுமக்களை வெகுவாக பாதித்தது. இந்நிலையில், மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியுள்ளது. இது நீண்டகால நோக்கில் பலனளிக்கக் கூடியது என்று சில பொருளாதார வல்லுநர்களால் கூறப்பட்டாலும், சிறுதொழில் நிறுவனங்கள் இதனால் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன.