வியாழன், 10 பிப்ரவரி, 2022

படகு ஏலத்தை தொடங்கிய இலங்கை… அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்

 10 2 2022 

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஏலம் விடும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் இலங்கையில் உள்ள ஐந்து துறைமுகங்களில் ஏலம் விடுப்படுகிறது.

இந்த ஏலம் விடும் பணி, பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் இலங்கை பணத்தில் ஆயிரம் ரூபாய் நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களின் 135 படகுகள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏலத்தின் முதல் நாளிலேயே 88 அடி நீளமுள்ள மீன்பிடி படகு இலங்கை ரூபாய் மதிப்பில் 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

முன்னதாக, தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறியதவாது, “இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இருதரப்பு புரிந்துணர்வு உள்ளது. அதற்கு இணங்க, தமிழகத்தை சேர்ந்த ஒரு குழுவினர், இலங்கையில் மீட்க முடியாத இந்திய மீன்பிடி படகுகளை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக கலந்தாலோசிக்க அங்கு செல்லவுள்ளது. இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/sri-lanka-auctioning-seized-boat-of-tn-fishermen-409224/