தேனியில் அமைக்கப்படும் நியூட்ரினோ திட்டத்தால், கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முல்லை பெரியாறு அணை உட்பட 12 முக்கிய அணைகள் இடிந்து விழும் அபாயம் ஏற்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.
தேனியில் நடைபெற்ற நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்ற மதிமுக பொதுசெயலாளர் வைகோ, செய்தியாளர்களை சந்தித்தார். நியூட்ரினோ ஆய்வகத்தை அமைப்பதற்கு மலையை குடைந்து சுரங்க பாதை அமைப்பதற்கு ஆயிரம் டன் வெடிபொருட்களை பயன்படுத்தி 12 லட்சம் டன் பாறைகள் தகர்க்கப்பட உள்ளதாக கூறினார். இதனால் கேரளா மற்றும் தமிழகத்தைச்
சேர்ந்த முல்லை பெரியாறு அணை உட்பட 12 முக்கிய அணைகள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும், இந்த திட்டத்திற்காக 12 லட்சம் லிட்டர் தண்ணீரை சுருளியாறில் இருந்து எடுப்பதால் விவசாயம் முழுவதும் பாதிக்கப்படும் எனவும் குற்றம்சாட்டினார்.