இரு சக்கர வாகனத்தில் வருபவர்களை, விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் உதவி ஆய்வாளர் முருகன் உட்பட 3 காவலர்கள் லத்தியால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதால், அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் வானூர் தொகுதிக்கு உட்பட்ட ஆரோவில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் முருகன் உட்பட 3 போலீசார், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை லத்தியால் தாக்கினர்.
பின்னர் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பின்னர் விடுவித்துள்ளனர்.
இதனை, அங்கிருந்த ஒருவர் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். இந்த வீடியோ வைரலானதால், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை லத்தியால் தாக்கியதோடு, லஞ்சம் வாங்கிய 3 பேரை, விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆயுத படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.