வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

55,000 ரூபாய் ஐ-போனுக்கு பதில் அதே சைசில் சோப்பு அனுப்பிவைத்த பிளிப்கார்ட்! February 2, 2018

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட், மும்பையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் ஆர்டர் செய்த ஐ-போனுக்கு பதிலாக சோப்பு அனுப்பிவைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மென்பொறியாளர் ஒருவர், பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஐ-போனை ஆர்டர் செய்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு, பிளிப்கார்ட் நிறுவன ஊழியர் அவர் ஆர்டர் செய்த பொருளை பன்வேல் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து வழங்கியுள்ளார். 

மிகவும் ஆவலுடன் அதனை திறந்து பார்க்கையில்,  ஐ-போனுக்கு பதில் அதே சைசில் சோப்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளார். 
இதனடிப்படையில், பிளிப்கார்ட் நிறுவனம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிளிப்கார்ட் நிறுவனமும் இதுகுறித்து விசாரித்து வருவதாக பிளிப்கார்ட் ஊழியர் தெரிவித்தார்.
Image

Related Posts: