தமிழகத்திற்கு தண்ணீர் தரும் பேச்சிற்கே இடமில்லை என கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு தண்ணீர் தருவது இயலாத காரியம் என அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் நீர்ப்பற்றாக்குறை குறித்து, முதலமைச்சர் சித்தராமையாவைச் சந்திக்கும் போது, தமிழக முதல்வரிடம் எடுத்துரைப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக அமைச்சர் கூறியுள்ளது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற வீ.கேர் நர்சிங் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின். செய்தியாள்களிடம் பேசிய கனிமொழி நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.
அமைச்சர் எம்.பி.பாட்டீல் பேச்சு தொடர்பாக கர்நாடக முதல்வர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், விவசாயிகள் கஷ்டமான நிலையில் உள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விசாயிகளுக்கு நிவாரணம் எந்த வகையிலும் கிடைக்கவில்லை என்றார்.
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் தீர்வு கூறும் வகையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர் விவசாயம் மட்டுமில்லை பல துறை பாதிப்படைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
மேலும், பாஜக திராவிட கட்சி என்றால் திராவிடத்திற்கு வேறு வார்த்தை தேட வேண்டும் என்றார்.