இந்துத்துவத்தை ஆதரிப்பவர்கள் பேசுவதற்கு வேறு எதுவும் இல்லாததால், அவர்கள் கவிஞர் வைரமுத்து விஷயத்தை பெரிதாக்குகிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விமர்சித்துள்ளார்.
திராவிடர் கழகம் சார்பில் கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை பெரவள்ளூரில் நடைபெற்றது. கி. வீரமணி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், திமுக எம்.பி. டிகேஎஸ். இளங்கோவன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கி. வீரமணி, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரி 5 ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார். மேலும், இந்துத்துவ ஆதரவாளர்களுக்கு தத்துவார்த்த வலிமை இல்லாததால், அவர்கள் வைரமுத்து விஷயத்தை பெரிதாக்குவதாகக் குற்றம் சாட்டினார்.