
சிறுமிகளுக்கு பாலியல் கொடுமைகளை நிகழ்த்துபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தை இயற்ற மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஸ்ரீவத்சவா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எல்லா குற்றங்களுக்கும் மரண தண்டனை தீர்வாகாது என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை கொடுப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.