மத்திய பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் தெரிவித்துள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய சீமான், மீனவளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
மேலும், மக்கள் நலனில் அக்கறை இல்லாத கார்பரேட்டுகள் லாபத்தை கருத்தில் கொண்டே செயல்படும் எனக் கூறிய சீமான், அவற்றிற்கு பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ள சலுகைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறை தொடர்பான பட்ஜெட் அறிவிப்புகளில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சரத்குமார் வேதனை தெரிவித்தார். இந்த பட்ஜெட்டால் பொருளாதாரம் உயர்ந்தாலும், தங்க தட்டில் உண்ண உணவு இல்லை என்ற நிலையே மிஞ்சும் எனவும் சரத்குமார் விமர்சித்தார்.