புதன், 19 பிப்ரவரி, 2020

தடையை மீறி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம்... இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! February 18, 2020

தடையை மீறி,  சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தலைமை செயலகம் உள்ள பகுதியில், மார்ச் 11-ம் தேதி வரை, எந்த போராட்டமும் நடத்த கூடாது, என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. 
இதுதொடர்பாக, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த காஜா மொய்தீன் ஹஜ்ரத், தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா, உள்ளிட்டோர் சென்னையில் கூட்டாக ஆலோசனை நடத்தினர்.
Protest
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பின் தலைவர் காஜா மொய்தீன், திட்டமிட்டப்படி 19 02 2020 காலை 10.30 மணிக்கு கலைவாணர் அரங்கம் பகுதியில் இருந்து புறப்பட்டு, தலைமைச் செயலகம் நோக்கி போராட்டம் நடைபெறும், என தெரிவித்துள்ளார்.

credit ns7.tv

Related Posts: