வன்முறை பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் கோரிக்கை 25.02.2020
வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் செவ்வாய்க்கிழமை துணை நிலை ஆளுநர் அனில் பைஜலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் துணை நிலை ஆளுநர் பைஜலுக்கு எழுதிய கடிதத்தில், இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியேறிய பின்னர் வன்முறை அதிகரிக்கக்கூடும் என்று டி.எம்.சி தலைவர் ஜாபருல் இஸ்லாம் கான் அச்சம் தெரிவித்துள்ளார். 'ஜனாதிபதி டிரம்ப் இன்றிரவு வெளியேறிய பின்னர் நாளை நிலைமை மோசமடையக்கூடும். தயவுசெய்து இதை அவசரமாக கருதுங்கள். ஏனெனில், எந்தவொரு தாமதமும் அதிக உயிர் இழப்பு மற்றும் சேதத்தை ஏற்படுத்தும் என்று கான் தனது கடிதத்தில் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கக் கோரி உள்ளார்.