செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்! February 24, 2020

credit ns7.tv
Image
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
2 நாள் அரசு முறை பயணமாக இன்று குடும்பத்தினருடன் குஜராத் வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ம்புக்கு நாளை டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த விருந்தில் பங்கேற்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்காததால் விருந்து நிகழ்ச்சியை காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆதிர்ரஞ்சன் சவுத்ரி ஏற்கெனவே விருந்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருந்த நிலையில் மன்மோகன் சிங்கும் இந்த விருந்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் சார்பில் வெளிநாட்டு தலைவர்களுக்கான விருந்தில் எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைக்கப்படுவது சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறை, இருப்பினும் இந்த முறை அவ்வாறு ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக ஒபாமாவின் இந்திய வருகையின் போது எதிர்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.