வங்கி ஏ.டி.எம்.களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வங்கிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதை குறைத்துவிட்டு 500 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கியும் குறைத்து விட்ட நிலையில், வங்கி ஏஎடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என இந்தியன் வங்கி அண்மையில் தெரிவித்திருந்தது.
இது குறித்து விளக்கம் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்தக்கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை” என தெரிவித்தார்.
credit ns7.tv