NPR கணக்கெடுப்பு தொடர்பாக ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். கூட்டறிக்கை வெளியிட்டிருப்பது, யாரை ஏமாற்றுவதற்கான நாடக ஒத்திகை?, என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினருக்கு எதிரான எந்த ஒரு செயலையும் அதிமுக அரசு செய்யாது என்று, ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டிருப்பது, "குதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி, குழியும் பறித்த கதையாக" இருப்பதாக, மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். NPR விவகாரத்தில் முதலமைச்சருக்கும், அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கும் கருத்தொற்றுமை இல்லை, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது உண்மை என்றால், NPR-ஐ தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று, உடனடியாக அறிவித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், என்று தீர்மானம் நிறைவேற்றுமாறு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
credit ns7.tv