வியாழன், 27 பிப்ரவரி, 2020

பாரத் மாதா கீ ஜே” சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம்

பாரத் மாதா கீ ஜே” சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம் - ஹிமாச்சல் முதல்வர்


தன்னை இந்த நாட்டின் தேச பக்தர்கள் (Desh Premi) என்று கூறுபவர்கள் தான் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள் - சி.பி.ஐ (எம்) குற்றச்சாட்டு
Delhi Violence Himachal CM Jai Ram Thakur : டெல்லியில் சில நாட்களாக கலவரம் அதன் உச்ச நிலையை எட்டியிருக்கின்ற நேரத்தில் பாரத் மாதா கீ ஜே என்று சொல்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம் என்று ஹிமாச்சல் மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் கூறியுள்ளது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஹிமாச்சல் மாநில நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர் ”பாரத் மாதா கீ ஜே என்று கூறுபவர்கள் இந்தியாவில் இருக்கலாம். யாரால் அதனை சொல்ல முடியாமல் போகின்றதோ, யார் இந்தியாவை எதிர்க்கின்றார்களோ, யார் இந்திய அரசியல் சாசனத்தை மதிக்காமல் மீண்டும் மீண்டும் நடந்து கொள்கின்றார்களோ, அவர்கள் குறித்து நாம் யோசனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது” என்று அம்மாநில சட்ட சபையில் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் இந்தியா வந்திருக்கும் இந்த சமயத்தில் இப்படியான ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டிருப்பதை குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது பதில் அளித்த அவர் “இது போன்ற மனநிலையுடன் செயல்படுவர்களை ‘டீல்’ செய்ய இது தான் சரியான நேரம் என்று அவர் கூறியுள்ளார்.
முதல்வரின் கருத்து குறித்து பேசிய சி.பி.ஐ (எம்) கட்சியின் எம்.எல்.ஏ ராகேஷ் சின்ஹா “இந்த அறிக்கையின் சூழல் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அரசியல் சாசனமும் அதன் முன்னுரையும் தான் மிகப்பெரிய ”ஜெய்”. ஜெய் என்று கூறுவதோ, இன்குலாப் என்று கூறுவதோ, அல்லது வந்தே மாதரம் என்று கூறுவதோ அவரவர் தனிப்பட்ட விருப்பம். இந்த வார்த்தைகள் அனைத்தும் இந்தியாவின் சுதந்திரத்தின் போது வந்தவை. நம்முடைய அரசியல் சாசனம் வலியுறுத்தும் நம் நாட்டின் ”வேற்றுமையில் ஒற்றுமையை” தவிர நமக்கு வேறென்ன முக்கியம் இருந்துவிட முடியும். தன்னை இந்த நாட்டின் தேச பக்தர்கள் (Desh Premi) என்று கூறுபவர்கள் தான் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள். அவர்கள் தான் தேவையற்ற வாதங்கள் மூலம் பிரச்சனைகளை தோற்றுவிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்
ஹிமாச்சல் பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி தலைவர் குல்தீப் ரத்தோரும் “மத ரீதியான வன்முறைகள் இந்தியாவில் தொடர்ந்து அரங்கேறுவதற்காக பாஜகவை குற்றம் சாட்டினார். பாஜக தான் மத்தியில் ஆட்சி அமைத்திருக்கிறது. நாட்டின் இன்றைய நிலைக்கு மத்திய அரசு தான் காராணம். அவர்கள் தான் இந்தியாவை பிரிக்கும் வேலையிலும், மதரீதியான போராட்டங்களுக்கும் வழி வகுக்கின்றனர் என்று கூறியுள்ளார். இந்தியாவில் மோசமடைந்து வரும் பொருளாதாரத்தில் இருந்து மக்களை திசை திருப்ப இந்த சி.ஏ.ஏ சட்டத்தை கொண்டு வந்தனர். இந்த கலவரத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இந்த போராட்டத்தில் 13 நபர்கள் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கலவரக்காரர்களை பார்த்தவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக பாஜகவின் கபில் மிஷ்ரா பேசிய கலவரத்தை தூண்டும் வகையான பேச்சினால் தான் இவ்வளவு பிரச்சனைகள் உருவாகியுள்ளது. இவரின் இந்த பேச்சினை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கல்லெறிந்து தாக்குதல்கள் நடத்தினார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்
credit : 
https://tamil.indianexpress.com/india/delhi-violence-himachal-cm-jai-ram-thakur-says-those-who-say-bharat-mata-ki-jai-will-stay-in-india-172215/