credit ns7.tv
துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் இன்று 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி, பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, என்பதை முடிவு செய்ய உள்ளது. இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரில், பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில, TNPSC குரூப் 4 முறைகேடு குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மான மனு அளித்துள்ளார்.
பரப்பான அரசியல் சூழலில் சட்ட மன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதால் அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் இந்த கூட்டத்தொடர் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.