credit ns7.tv
இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடத்தப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தில், சிபிஎம் கட்சியின் உயர் மட்டக் குழு உறுப்பினரான பிருந்தா கரத் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக அரசு ஆதரிப்பதற்காக வெட்கப்படுவதாகவும் அவர் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிருந்த கரத், மோடி - அமித் ஷாவின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துபவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் குறிப்பிட்டார். மதத்தின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது அரசியலமைப்புக்கு எதிரானது என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லையா? என்றும் பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றியதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வரலாற்று பிழையை செய்துள்ளதாக பிருந்தா காரத் விமர்சித்துள்ளார்.