வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும்: தமிழக அரசு

Image
அரசு ஊழியர்கள் பணிநேரத்தின்போது, கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா, அனைத்துத்துறை முதன்மை செயலாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, இனி அரசுப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பெரும்பாலான அரசு அலுவலர்கள், பணிநேரத்தின்போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் தொடந்து வருவதாகவும், அது போன்ற புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். அடையாள அட்டை அணிவது தொடர்பாக, துறை செயலாளர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
credit ns7.tv