போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி: டெல்லியில் கலவர மயமான சி.ஏ.ஏ. போராட்டம்
வடகிழக்கு டெல்லியில் இன்று சிஏஏ போராட்டம் மீதான வன்முறையின் போது முஹமது ஃபுர்கான் என்பவர் பலியானார். மேலும், இந்த வன்முறையில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளும் பலியானர். 37 போலீஸார் காயமடைந்துள்ளனர்.
டெல்லியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது - உள்துறை செயலாளர்
வடகிழக்கு டெல்லியில் சிஏஏ போராட்ட வன்முறையைத் தொடர்ந்து உள்துறை செயலாளர் அஜய் பல்லா கூறுகையில், களத்தில் போதுமான காவலர்கள் உள்ளனர். நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மூத்த அதிகாரிகள் களத்தில் உள்ளனர்.போதுமான படைகள் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த வன்முறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்
ராகுல் காந்தி வடகிழக்கு டெல்லியில் நடந்துள்ள வன்முறை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை நடந்த வன்முறை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: “இன்று டெல்லியில் நடந்த வன்முறைகள் கவலை அளிக்கின்றன. இந்த வன்முறை சம்பத்தை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். அமைதியான போராட்டங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம். ஆனால், வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. எந்த ஆத்திரமூட்டல் நிகழ்வுகள் இருந்தாலும் கட்டுப்பாடு, இரக்கம் மற்றும் புரிதலை காட்ட வேண்டும் என நான் டெல்லி குடிமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
credit indianexpress.com