திங்கள், 24 பிப்ரவரி, 2020

காஷ்மீரில் வீட்டுக் காவலில் உள்ள அரசியல் தலைவர்கள்

காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விரைவில் விடுதலை பெறுவதற்கு தான் பிரார்த்திப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்பட ஏராளமான தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அண்மையில் உமர் அப்துல்லாவின் புகைப்படம் ஒன்று வெளியாகி காஷ்மீர் நிலைமையை வெளிக்காட்டியது. 
Kashmir House arrest
வீட்டுக்காவல் வைக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில் காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலையாக பிரார்த்திப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். விடுதலையான பின்னர் அவர்கள் மாநிலத்தின் அமைதிக்காக பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 
காஷ்மீரில் அமைதி நிலவுவதாகவும், நிலைமை மேம்பட்டு வருவதாகக்  கூறிய ராஜ்நாத் சிங், மத்திய அரசு யாரையும் துன்புறுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

credit ns7.tv