திங்கள், 17 பிப்ரவரி, 2020

முதலமைச்சரை சந்தித்து எஸ்டிபிஐ கட்சியினர் பேச்சுவார்த்தை!

Image
17.02.2020 குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்காது என முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக எஸ்டிபிஐ கட்சியினர் தெரிவித்துள்ளனர். 
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபராக் , தேசிய துணை தலைவர் தெஹலான் பாகவி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினர். ஒரு  மணி நேர சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தெஹலான் பாகவி, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகக் கூறினார். 
சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரை, தங்களது போராட்டம் அமைதி வழியில் தொடரும் என்ற அவர், தங்களின் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெஹலான் பாகவி தெரிவித்தார். 
credit ns7.tv