செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கேள்வியே இல்லாமல் பாயும் தேசத்துரோக சட்டம்

அமுல்யா முதல் அசாம்கர் வரை: கேள்வியே இல்லாமல் பாயும் தேசத்துரோக சட்டம்


அமுல்யா லியோனா வழக்கின் உண்மை தன்மைகள் 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்வந்த் சிங் Vs பஞ்சாப் மாநிலம் வழக்குகளைப் போலவே உள்ளன.

feb 23rd 2020 -

கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில்,பெங்களூரு நகரத்தின் ஆறாவது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஷிரின் ஜாவீத் அன்சாரியை அணுகிய போலீசார், இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 ஏ பிரிவின் கீழ் தேச தோரக வழக்கில் கைது செய்யப்பட்ட 19 வயதான அமுல்யா லியோனா காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணியில் அமுல்யா லியோனா “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற வாசகத்தை எழுப்பினர்.
பெருநகர மாஜிஸ்திரேட் அமுல்யா லியோனாவுக்கு இரண்டு வாரம் நீதிமன்றக் காவலில் விசாரிக்க அனுமதி கொடுப்பதற்கு முன்பு, அமுல்யா வழக்கறிஞர்களிடம் “அமுல்யாவை எப்போது கைது செய்தனர்?காவல்துறையினர் அவரை அடித்திருக்கிறார்களா? என்று வினவினார்.
ரிமாண்ட் ஆர்டரும், எஃப்.ஐ.ஆரும் இன்னும் ஆன்லைனில் பதிவேற்றப்படவில்லை. அமுல்யாவின் வழக்கறிஞர்களுக்கு இந்த ஆவணங்களின் நகல்கள் கூட இன்னும் வழங்கப்படவில்லை.
அமுல்யாவின் வழக்கு 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்வந்த் சிங் Vs பஞ்சாப் மாநிலம் வழக்கின் உண்மை தன்மைகள் போலுள்ளன. இதில், வெறும் முழக்கம் தேசத் துரோகம் அல்ல என்ற முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
“… இதுபோன்ற சாதாரண கோஷங்களை எழுப்பும்போது(பல முறையோ), ​​நிறுவக்கூடிய எந்தவொரு செயலும் இல்லாமல், அதை தேசத்துரோக குற்றச்சாட்டாக கருதுவது  கடினம்” என்று நீதிமன்றம் கூறியது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரான பல்வந்த் சிங், பூபிந்தர் சிங் ஆகியோர் “எங்கள் ஆட்சியை நிலைநாட்ட நேரம் வந்துவிட்டது, நாங்கள் இந்துக்களை பஞ்சாபிலிருந்து வெளியேற்றுவோம்’ என்று கூச்சலிட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்”.
“இரண்டு நபர்களால் எழுப்பப்பட்ட சாதாரணமான முழக்கங்கள், இந்தியாவில் சட்டத்தால் நிறுவப்பட்ட பிரிவு 124 ஏ ஐபிசியின் கீழ் கொண்டு வர முடியாது. 124- ஏ அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பையும் விரோத உணர்ச்சியையும் தூண்டுவது குறித்து பேசுகிறது. இந்த வழக்கின் சூழ்நிலைகள் 124- ஏ ஐபிசி பிரிவை ஈர்க்கவில்லை” என்றது நீதிமன்றம்.
கேதார் நாத் சிங் மற்றும் பீகார் மாநிலத்தில் (1962) உச்சநீதிமன்றம் சட்டத்தை உறுதி செய்திருந்தாலும், “பொதுக் கோளாறுகளைத் தூண்டும் பேச்சு” மட்டுமே தண்டனைக்குரியது என்ற கட்டுப்பாடோடு தான் நீதிமன்றம் இந்த பிரிவை அணுகும் என்று தெரிவித்தது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க Amulya Leona to Azamgarh, sedition law used without questions, Supreme Court guidelines ignored
தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றக் காவலில் விசாரிக்க  உத்தரவிடும்போது, முதன்மையான எஃப்.ஐ.ஆரில் தேசத்துரோக குற்றத்தை உருவாக்கும் அடிச்சுவடு உள்ளனவா?  உடனடியான வன்முறையைத் தூண்டுகின்றனவா? கைது நடவடிக்கை நியாயமானதா? என்று மாஜிஸ்திரேட் முதலில்  தன்னை திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இருப்பினும், உத்தரபிரதேசம், கர்நாடக, அசாம் போன்ற  மாநிலங்களில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட 25 நபர்களை விசாரித்த மாஜிஸ்திரேட்கள் இது போன்ற எந்த நடைமுறையும் பின்பற்றவில்லை.
ஒரு தனிப்பட்ட மனிதர்களின் சுதந்திர பிரச்சினை குறித்த வழக்கை மாஜிஸ்திரேட் ஆழ்ந்த பார்வையோடு விசாரித்தல் வேண்டும். மேலும், ரிமாண்ட் உத்தரவு அவசியம் என்பதில் முழுமையாக திருப்தி அடைய வேண்டும்.
credit indianexpress.com


ஜாமீன் மறுப்பதற்கோ, ரிமாண்ட் வழங்குவதற்கோ குற்றத்தின் ஈர்ப்பு (Gravity of the Offence) மட்டுமே பெரிய காரணி இல்லை என்பதை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகூர் தி சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
பிப்ரவரி 5 ம் தேதி, உத்தரப் பிரேதேச காவல் துறை, 36 நபர்கள் மீது, 19 ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.  உதாரணமாக,124 ஏ (தேசத்துரோகம்), 147 (கலகம்), 153-ஏ (வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல்), 504 (அவமதிப்பு சமாதானத்தை மீறும் நோக்கத்துடன்), 307 (கொலை முயற்சி) மற்றும் 120-பி (குற்றவியல் சதி)……
இந்த 36 பேர்”பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்” என்று எஃப்.ஐ.ஆர் அறிக்கையில்  குறிப்பிடப் பட்டுள்ளது.
65 வயது முதியவர் உட்பட  பத்தொன்பது பேர், கைது செய்யப்பட்டனர். அனைவரும் இஸ்லாமியர்கள். அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றக் காவல் கோரினார். ஒரு பக்களவு  குறிப்பை முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட் (சி.ஜே.எம்) பிரமோத் குமார் முன் சமர்ப்பித்தார். அதில் தேசத்துரோக வழக்குகளில், சி.ஜே.எம் ஜாமீன் வழங்க தகுதியற்றவர் என்றும்  தெரிவித்தார்.
ஐந்து நிமிடங்கள் நீடித்த இந்த விசாரணையில், சி.ஜே.எம்.குமார் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும்  14 நாட்கள் போலீஸ் காவல் வைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நீதிமன்ற இணையதளத்தில் இன்னும் பதிவேற்றப்படவில்லை, ஏன்…. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கூட வழங்கப்படவில்லை. போலிஸ் காவலில் வைத்த அந்த 14 நாட்களும் முடிந்தன, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏனெனில், பின்னர் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தால் நீதிமன்றம் முடங்கிவிட்டது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 439 ன் கீழ், ஜாமீன் அல்லாத குற்றங்கள், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனைக்கு உட்பட்ட வழக்குகளில் ஜாமீன் வழங்க மாவட்ட நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அதிகாரம் கொண்டவை.
ஒரு அரிய நிகழ்வாக, பேஸ்புக்கில் பதிவுக்காக கைது செய்யப்பட்ட மணிப்பூர் மாணவர் ஆர்வலர் வீமன் தோச்சோமை தேசத் துரோக வழக்கில் இருந்து விடுவிக்க 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். “வன்முறையைத் வித்திடும் வகையில் இந்த பதிவில் நான் எந்த முயற்சியையும் தூண்டுதலையும் காணவில்லை” என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
அசாமில், டிசம்பர் 12 ம் தேதி  கைது செய்யப்பட்ட ஆர்வலர் அகில் கோகோய் மீதான தேசத் துரோக வழக்கை சிறப்பு தேசிய புலனாய்வு அமைப்பு நீதிபதி மஹ்மூத் அகமது விசாரித்தார். மறுநாள் அசாம் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.  பின்னர் கோகோய் குவஹாத்திக்கு அழைத்து வரப்பட்டார்.
“இரு தரப்பினரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி அகமது,  தனது உத்தரவில் கோகோயை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு அனுமதியளித்தார்.
“ரிமாண்ட் உத்தரவில் எந்தவொரு காரணத்தையும் தெளிவாக கூறவில்லை. ஏனென்னில்முதலில் இது தெளிவாக விசாரிக்கப்படவில்லை. தவறுதலாக, மக்கள் கைது செய்யபடாமல் தவர்ப்பதே ஒரு மாஜிஸ்திரேட்டின் வேலை, ஆனால், இங்கு என்ன நடக்கிறது ? என்று மும்பையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும் மனித உரிமை வழக்கறிஞருமான மிஹிர் தேசாய் கூறினார்.
அசாம் போலிஸ் எஃப்.ஐ.ஆர் அறிக்கையின் நேர முத்திரை டிசம்பர் 13 இரவு 11.15 மணி ஆகும். மேலும்,  மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை சில மணி நேரங்களுக்குப் பிறகு என்ஐஏவுக்கு மாற்றியது. கோகோயின் காவலை என்ஐஏ 20 நாட்கள் கோரியபோது, அவரது வழக்கறிஞர் சாந்தனு போர்த்தாகூர், இந்த வழக்கை விசாரிக்க மாநில காவல்துறைக்கு நேரமில்லை என்று வாதிட்டார். இருப்பினும், இந்த வாதம் நீதிபதி அகமதுவின் உத்தரவில் குறிப்பிடப்படவில்லை.
பிரிவு 124 ஏ தவிர, கோகோய் , திர்ஜியா கொன்வார், மனஸ் கொன்வார், பிட்டு சோனோவால் ஆகியோர் “சிபிஐ (மாவோயிஸ்டு) உடன் தொடர்பு வைத்திருந்ததற்காக” சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (யுஏபிஏ)  குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
பிதாரில் (கர்நாடக), அசாம்கரைப் போலவே, ஷாஹீன் உருது தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ஃபரீதா பேகம் மற்றும் ஒரு குழந்தைக்குத் தாயான நஜமுன்னிசா ஆகியோர்  பிரதமருக்கு எதிரான அவதூறான கருத்துகளை தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
இரண்டு பெண்களும் முன் ஜாமீன் கோரவில்லை. சி.ஜே.எம் எந்த கேள்வியும் இல்லாமல் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். பின்னர், இரு பெண்களும் பிதர் மாவட்ட நீதிபதி முன் ஜாமீனுக்கு விண்ணப்பித்தனர்.
“மாஜிஸ்திரேட் ஜாமீன் விண்ணப்பத்தை நிராகரிப்பார், இதற்கு எதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரத்தை கொண்ட மாவட்ட நீதிபதி முன் எங்கள் ஜாமீன் மனுவைத்  தாக்கல் செய்தோம்” என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரான சிவில் உரிமை வழக்கறிஞர் பி.டி வெங்கடேஷ் கூறினார்.