புதன், 26 பிப்ரவரி, 2020

வாழும் உரிமை மற்றும் அரசியலமைப்பின் நெறி ஆகியவற்றை மீறுவதைக் குறிக்கிறது.

ரோஹிங்கியா அகதிகளை நடத்தும் விதமே மோடி அரசின் பாகுபாட்டைக் காட்டுகிறது


ரோஹிங்கியா அகதிகளை நடத்தும் விதம், 2015-2016ம் ஆண்டில் திருத்தப்பட்ட பாஸ்போர்ட் விதிகள் மற்றும் வெளிநாட்டினர் குறித்த சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது,...
ரோஹிங்கியாக்களை திரும்ப அனுப்புவது, வாழும் உரிமை மற்றும் அரசியலமைப்பின் நெறி ஆகியவற்றை மீறுவதைக் குறிக்கிறது.
சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள், மியான்மரின் உயர் அதிகாரிகள், தங்கள் நாட்டின் சிறுபான்மையினரான ரோஹிங்கியாக்களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். ஐ.நா-வின் உண்மை கண்டறியும் நடவடிக்கை மற்றும் பல்வேறு அரசியல் தீர்மானங்களை சுட்டிக்காட்டி, கொல்லப்படும், உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் ரோஹிங்கியாக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மியான்மர் உடனடியாக எடுக்க வேண்டும் என்று உலக நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்திய உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கு தேவையான குறிபிடத்தக்க அறம் மற்றும் சட்டத்தின் உட்கருத்து உலக நீதிமன்றத்தின் உத்தரவில் உள்ளது. அது, அரசு முன்மொழிந்த, ரோஹிங்கியா முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு சவால்விடுகிறது. அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை கோருகிறது. அவர்களை வற்புறுத்தி திரும்ப அனுப்பக்கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் மட்டுமின்றி, அவர்கள் துன்பப்படும் இடத்திற்கு திரும்ப அனுப்பக்கூடாது என்பதாலும், சட்டப்பிரிவு 21, இந்தியாவிற்குள் வாழும் குடிமக்கள் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமையை வழங்கியுள்ளது. இந்த கொள்கைகள், நாம் மாற்றி அமைக்க முடியாத சர்வதேச சட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டது.
எந்தவொரு தேச பாதுகாப்பு விதிவிலக்கும் இந்த கொள்கையின் கீழ் வரும்போது தீவிரமாக நிரூபிக்கப்பட வேண்டும். சட்டப்பிரிவு 21ஐ மீறுவது ஆழமான காரணமுடையதாக இருக்க வேண்டும். இதை பரிசீலிக்கும்போது நேர்மையாகவும், நடுநிலையாகவும் இருக்க வேண்டும். வலுக்கட்டாயமாக திரும்ப அனுப்புவது கூடாது. அது தன்னிச்சையான, பாகுபாடான, அரசியலமைப்பின் அறத்திற்கு செய்யும் கேடான செயலாகும். இது தன்னிச்சையானது, ஏனெனில், இது கொள்கை தெளிவின்றி எடுக்கப்பட்ட, ஏற்கனவே உள்ள கொள்கைக்கு நேரெதிராக எடுக்கப்பட்ட முடிவாகும். மேலும் இது பாகுபாடானது, ஏனெனில், இந்த திடீர் நேரெதிரான கொள்கை முடிவுக்கு கொடுக்கப்பட்ட விளக்கம், அதிக அளவிலான ரோஹிங்கியாக்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே ஆகும். அகதிகளை இவ்வாறு நடத்துவது அவர்களின் சுதந்திர உரிமையை பறிப்பதாகும். எனவே இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்.
1951ம் ஆண்டு அகதிகள் நிலை குறித்த மாநாட்டில் இந்தியா கையெழுத்திடவில்லை. அது 2011ம் ஆண்டு முதல் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் என்று அழைக்கப்படுவோருக்கான, ஒரு நிலையான செயல்முறை நடவடிக்கையை வைத்துள்ளது. அவர்கள் இனம், மதம், பாலினம், தேசிய, குறிப்பிட்ட சமூக குழுக்களால் அல்லது அரசியல் கொள்கைகளால், துன்புறுத்தப்பட்டிருப்பது உண்மையாக இருந்து, அது முதல் விசாரணையிலே தெரிந்தால், அவர்களுக்கு நீண்ட நாட்களுக்கான விசா வழங்கப்படும். இதன் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் , அகதிகள் என்று அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு, அரசு அல்லது ஐநாவின் அகதிகள் உயர் கமிஷன் நீண்ட கால விசா வழங்க துவங்கிவிட்டது. இது பல்வேறு நாடுகள் மற்றும் இனக்குழுக்களுக்கும் பொருந்தும்.
2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இந்த அரசு பாஸ்போர்டுக்கான விதிகள் மற்றும் வெளிநாட்டினருக்கான உத்தரவுகளை திருத்தியது. அதில் பாஸ்போர்ட் சட்டம் 1920 மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 1946ல் உள்ள சரத்துக்களுக்கு இணங்காதவற்றை திருத்தியது. அதில் இந்து, சீக்கியர், பௌத்தம், பார்சி, ஜெயின் மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய கிறிஸ்தவர்கள், மதத்தால் துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாகுபாடான அறிவிப்புகள் முஸ்லிம் அகதிகளை தவிர்ப்பது வெளிப்படையாக தெரிகிறது. மேலும் 2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு முன்னோடியாகவும் உள்ளது. 2018ம் ஆண்டு அக்டோபரில் ரோஹிங்கியா வழக்கின் குறிப்பிடத்தக்க கடைசி விசாரணையில், குடியுரிமை பாதுகாப்பு, மனிதாபிமான கோரிக்கைகள், சர்வதேச சட்ட நடைமுறைகள் இருந்தபோதிலும், 2012ம்  ஆண்டு முதல் அஸ்ஸாமில் காவலில் வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியாவைச் சேர்ந்த ஆண்கள் 7 பேரையும் நாடு கடத்துவதற்கு தடை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், மியான்மருக்கு முதன்முறையாக அகதிகள் திரும்ப அனுப்பிவைக்கப்பட்டபோது பெரும் வன்முறை வெடித்தது. மியான்மர் அகதிகளை குடிமக்களாக ஏற்றுக்கொண்டது என்றும், அவர்களும் தங்கள் நாட்டிற்கு திரும்ப செல்ல ஒப்புக்கொண்டதாவும், இந்தியா தனது நீண்ட வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தது. இந்த கூற்றுகள் தவறாக இருந்தபோதும், உச்சநீதிமன்றம் அவர்கள் நாட்டுக்கு திரும்ப அனுப்பப்படும் விவகாரத்தில் தலையிட மறுத்தது. அவர்களுக்கு சட்ட ஆலோசனைகளும் மறுக்கப்பட்டது அல்லது அவர்களின் ஒப்புதலை தெரிவிக்க அனுமதி வழங்கப்பட்டதா என்பதை அகதிகளுக்கான ஐநாவின் உயர் அதிகாரிகள், தீர்மானிக்க அனுமதிக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. பின்னர், இந்தியா வாக்குமூலத்தில் கூறியபடி, அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை என்று மியான்மரில் இருந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், சர்ச்சைக்குரிய தேசிய அடையாள அட்டைகள் அவர்களின் இனத்தை அங்கீகரிக்கவில்லை.
ரோஹிங்கியா அகதிகளை நடத்தும் விதம், 2015-2016ம் ஆண்டில் திருத்தப்பட்ட பாஸ்போர்ட் விதிகள் மற்றும் வெளிநாட்டினர் குறித்த சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, முஸ்லிம்கள் மீது இந்த அரசு பாகுபாடும், விரோத அணுகுமுறையும் காட்டுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இது 2018ம் ஆண்டு அக்டோபரில், அனுமதித்த, துன்பப்பட்டு, இனப்படுகொலையிலிருந்து தப்பிய இன சிறுபான்மையினரை பாதுகாக்கும் அதன் பொறுப்பில் இருந்து உச்ச நீதிமன்றம் விலகிவிட்டதை காட்டுகிறது. இந்தியாவில் ரோஹிங்கியாக்களின் நிலை மோசமாகிவிட்டது.
கட்டுரையாளர்: பிரசாந்த் பூஷன் மற்றும் டிசோசா, உச்ச நீதிமன்ற ரோஹிங்கியா அகதிகளுக்கான ஆலோசகர்கள்தமிழில்: R. பிரியதர்சினி.
credit indianexpress.com