சனி, 15 பிப்ரவரி, 2020

சீனாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 1380ஆக அதிகரிப்பு!

Image
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சீனா உட்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில், சீனாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,380 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,090 ஆக இருந்தது. இதில் ஹூபே மாகாணத்தில் மட்டும் 4,823 பேர் என்பது கவனிக்கத்தக்கது.
இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 64,435ஆக அதிகரித்தது.
இதனிடையே வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினரில் 1,700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளது சீன சுகாதாரத்துறையினரை கவலைகொள்ளச் செய்துள்ளது.
சீனா தவிர்த்து 27 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியிருக்கும் நிலையில் ஜப்பானைச் சேர்ந்த சொகுசுக் கப்பலில் 219 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
credit ns7.tv