குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் நாரயணசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாரட்டு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் நேற்று நடந்த சிறப்பு கூட்டத்தின்போது குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NPRக்கு எதிராகவும், சமூகநீதிக்கான இட ஒதுக்கீடுக்காகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் பேசிய புதுவை முதல்வர் நாரயணசாமி, குடியுரிமை திருத்த சட்டத்தை மக்கள் ஏற்கவில்லை என்பதால் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார். மேலும் இதனால் தனது அரசை கலைத்தாலும் பரவாயில்லை என்று கூறினார். தனது ஆட்சியே போனாலும் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராக எப்போதும் போராடப்போவதாகவும் அவர் கூறினார்.
இதுக்குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், CAA, NRC, NPR க்கு எதிர்ப்பு, சமூகநீதிக்கான இடஒதுக்கீடு ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றி புதுவை வரலாற்றில் புரட்சிகர இடத்தைப் முதல்வர் நாராயணசாமி பிடித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஆட்சியே போனாலும் பராவாயில்லை என்று தலைவர் கலைஞரின் பாணியில் அவர் கொண்டிருக்கும் அஞ்சாமையை மனமாரப் பாராட்டுவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#CAA_NRC_NPR க்கு எதிர்ப்பு, சமூகநீதிக்கான இடஒதுக்கீடு ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றி புதுவை வரலாற்றில் புரட்சிகர இடத்தைப் பிடித்துள்ளார் முதல்வர் @VNarayanasami
'இதனால் எனது ஆட்சியே போனாலும் கவலை இல்லை'என்ற அவரின் 'தலைவர் கலைஞர் பாணி' அஞ்சாமையை, மனமாரப் பாராட்டி, வாழ்த்துகிறேன்!
இதைப் பற்றி 456 பேர் பேசுகிறார்கள்
credit ns7.tv