வியாழன், 27 பிப்ரவரி, 2020

தமிழக போலிஸ் தொடங்கிய வாட்ஸ்அப் குரூப் : இணைவது எப்படி?

வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடங்களில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல போலி செய்திகள் பரவி வருகின்றன.
அதிலும், குறிப்பாக எய்ட்ஸ் நோயை பரப்பும் குழுக்களிடம் இருந்து ஜாக்கிரதை, குழந்தை கடத்தல் கும்பல்களிடம் இருந்து ஜாக்கிரதை, பெண்களுக்கான பிரத்தியோக கேப் சேவை போன்ற பொய்யான குறுந்தகவல்கள் தமிழக போலிஸ்  பெயரில் பகிரப்பட்டது. இது போன்ற அவதூறு செய்திகளில் தமிழ்நாடு காவல்துறையின் சின்னங்கள் திட்டமிட்டு பயன்படுத்தப் பட்டது . இந்த போலி செய்திகளை தடுக்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை எற்படுத்தவும் சென்னை காவல் துறை சிறப்புக் குழுவை ஏற்படுத்தியிருக்கிறது
இந்நிலையில், வாட்ஸ்அப் கம்யூனிட்டி ப்ராட்கேஸ்ட் குரூப்பை தமிழக காவல்துரை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம், சமூக ஊடங்களில் பரவும் போலி செய்திகளின் உண்மை நிலவரங்களையும், விழிப்புணர்வுகளையும் பொது மக்களுக்கு  கொடுக்க முடியும் என்று காவல்துறை நம்புகிறது.
இந்த குரூப்பில் எப்படி சேர்வது ? 
உங்கள் போனில் 9498111191 என்ற பத்து இலக்கு எண்ணை தமிழ்நாடு காவல்துறை என்று பதிவேற்றம் செய்து செய்து கொள்ளுங்கள். பின்னர், வாட்ஸ்அப் பின் மூலம் அந்த எண்ணிற்கு ‘JOIN’ என்று டைப் செய்து அனுப்புங்கள். உடனடியாக அந்த குரூப்பில் சேர்க்கப்படுவீர்கள்.
தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் கணக்கிற்கு உங்களை அழைக்கின்றோம். குற்றத்தை இங்கே புகாரளிக்க வேண்டாம்.  அவசர தேவைகளுக்கு எண்.100-ஐ டயல் செய்யுங்கள். வழக்கமான புதுப்பிப்புகளைப் பெற இந்த எண்ணை உங்கள் தொடர்புகளில் சேமிக்கவும்.  உங்களுக்கு சிறப்பாக சேவை செய்ய எங்களுக்கு உதவுங்கள் என்ற குறுந்தகவல் உங்களுக்கு அனுப்பப்டும்.
எனவே, இந்த குரூப்பில் நீங்கள் புகார் அளிக்க முடியாது. காவல்துறையின் செய்திகளை மட்டும் பெறலாம்.
உறுப்பினர்கள் வழக்கமான அடிப்படையில் செய்திகளைப் பெறத் தொடங்குவார்கள். வதந்திகள் வரும்போதெல்லாம், அதற்கான விழிப்புணர்வு செய்திகள் இங்கே அனுப்பப்படும் ,”என்று அதிகாரிகள் தெரிவிகின்ர்கன்ர்.
இந்த முயற்சி, பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நாள் வரை குறைந்தது 10,000  மக்கள் இந்த குரூப்-ல் இணைந்துள்ளனர்.