திருப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்தை நோக்கி கேரள மாநில சொகுசு பேருந்து ஒன்று சேலம் வழியாக சென்று கொண்டிருந்தது. பேருந்து அவிநாசி-திருப்பூர் சந்திப்பு அருகே சென்ற போது, எதிர்திசையில் வந்த கண்டெய்னர் லாரியின் டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பை தாண்டி சொகுசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 5 பெண்கள் உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் உயிரிழந்த 15 ஆண்களில் 9 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எர்ணாகுளத்தை சேர்ந்த கிரீஸ்( GREES) மற்றும் பய்ஜு (BAIJU), திரிச்சூரை சேர்ந்த இக்னி ரபேல் (IGNI RAPHAEL) , ஹனீஸ் (HANNISH) மற்றும் முகமது அலி, நிலக்கல்லை சேர்ந்த கிரன் குமார், பாலக்காடை சேர்ந்த சிவகுமார் , ராஜேஷ் மற்றும் ஜிஸ்மன் ஷாஜூ (JISMON SHAJU) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பெண்களில் 5 பேர் உயிரிழந்த நிலையில் பாலக்காட்டை சேர்ந்த ஐஸ்வர்யா மற்றும் ரோஷானா ஆகியோரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது
credit ns7.tv