செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

என்பிஆர்-க்கு எதிராக மக்களை திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம்!" - திமுக தீர்மானம்

credit ns7.tv
Image
தேசிய மக்கள் தொகை பதிவேட்டை எதிர்த்து காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் மக்களைத் திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல் தமிழகத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யும் வகையில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Related Posts: