புதன், 26 பிப்ரவரி, 2020

Auto Reply to Chat Messages” வேலை செய்கிறது


பெங்களூருவை சேர்ந்த பூஜா என்ற பெண் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு காலை உணவு தயாரித்து வழங்கும் தொழிலை செய்து வருகிறார். இவர் பல வாடிக்கையாளர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார். இன்றைய காலை உணவு பட்டியல் போன்ற வழக்கமான விசாரணைகள் எந்தெந்த இடங்களுக்கு அவர் விநியோகம் செய்வார் என்பது போன்ற புதிய வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் விசாரணைகள், உணவுகளின் விலை மற்றும் விநியோக நேரம் போன்ற வாடிக்கையாளர்களின் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குறுஞ்செய்திகளோடு பூஜாவின் நாள் தினமும் ஆரம்பமாகிறது.
தினமும் முதல் பாதி நாள் மிகவும் பரபரப்பாக செல்லும் என விளக்குகிறார் பூஜா. உணவு தயாரிப்பில் அவர் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் போது அவரது கைபேசி பலவித விசாரணைகளோடு தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். காலை 11 மணிக்கு முன்பு அனைத்து உணவுகளையும் தயாரித்து முடிக்க வேண்டும் என்பதால் என்னால் அனைத்து விசாரணை குறுஞ்செய்திகளுக்கும் பதில் அனுப்ப இயலாது. அப்படி அனுப்பி கொண்டிருந்த்தால் என்னால் சரியான நேரத்துக்கு உணவுகளை விநியோகிக்க முடியாது, என்கிறார் பூஜா. அப்போது தான் குறுஞ்செய்திகளுக்கு தானாக பதிலளிக்கும் (’Auto Reply to Chat Messages’) வசதியை தரும் இலவச ஆப்கள் (app) குறித்து தெரிய வந்தது. முயற்சி செய்து பார்க்கலாம் என்று அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்தேன். இப்போது தினமும் காலை, எனது உணவு பட்டியல் மற்றும் பதில்களை உள்ளீடு செய்து அந்த ஆப் மூலம் தானாக பதில் அளித்து வருகிறேன் என்கிறார் பூஜா.

எப்படி Auto Reply to Chat Messages” வேலை செய்கிறது
முதலில் ஆப்பை நிறுவிக் கொள்ளுங்கள்
notification permission ஐ வழங்குங்கள் (needed to read Chat Messages from notification)
ஒரு விதியை உருவாக்கிக் கொள்ளுங்கள். வெளியில் இருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கு எந்தவிதமான பதிலை வழங்க வேண்டும் மேலும் யாருக்கு வழங்க வேண்டும் என்பதை விதியில் குறிப்பிடுங்கள்.
அவ்வுளவு தான். இனி வெளியில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை ஆப் ஆய்வு செய்யும். அந்த குறுஞ்செய்தி நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள விதியில் உள்ள ஏதாவது குறுஞ்செய்தியோடு ஒத்துப் போனால் பதில் அனுப்பபடும். இல்லை என்றால் வரும் குறுஞ்செய்தி புறக்கணிக்கப்படும்.
credit indianexpress.com